fbpx

சென்னை மக்களே…! இன்று முதல் ஒரு வார காலத்திற்கு போக்குவரத்தில் மாற்றம்…! காவல்துறை முக்கிய அறிவிப்பு…!

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக ஆயிரம் விளக்கு பகுதி ஒயிட்ஸ் சாலையில் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம்.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; சென்னை ஒயிட்ஸ் சாலையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதிகளில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளைக் கருத்தில் கொண்டு. போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு பின்வரும் போக்குவரத்து மாற்றங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பட்டுலாஸ் சாலை ஒயிட்ஸ் சாலை சந்திப்பிலிருந்து ஒயிட்ஸ் சாலை x திரு வி க சந்திப்பு வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. அதே போல, ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து அண்ணாசாலை நோக்கி ஒயிட்ஸ் சாலையில் வரும் வாகனங்கள் பட்டுலாஸ் சாலை ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் திரும்பி தங்களது இலக்கை அடையலாம்.

அண்ணாசாலையிலிருந்து ஸ்மித் சாலையில் வரும் வாகனங்கள் ஸ்மித் ரோடு x ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஒயிட்ஸ் சாலை X திரு விகா சந்திப்பில் இருந்து பட்டுலாஸ் சாலை ஒயிட்ஸ் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் இயக்கப்பட்டு ராயப்பேட்டை மணிக்கூண்டிற்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

கோவை தொகுதியில் உதயநிதியின் மாஸ்டர் பிளான்!… உறுதியாகும் கூட்டணி?… மக்களவை தேர்தல் படுஜோர்!

Sun Jan 28 , 2024
2024 மக்களவை தேர்தலை ஒட்டி, கூட்டணி கணக்குகளை போட அரசியல் கட்சிகள் தயாராகி விட்டன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி என மும்முனை போட்டி நிலவும் என்று தெரிகிறது. கடந்த தேர்தலில் இருந்த சில கட்சிகள் அணி மாற திட்டமிட்டுள்ளன. இருப்பினும், இனிமேல் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக அறிவித்துவிட்டது. 2024 மக்களவை தேர்தலை ஒட்டி கூட்டணி கணக்குகளை […]

You May Like