நம்முடைய வழிபாட்டு முறைகளில் ஒவ்வொரு நாள் திதி இவற்றுக்கெல்லாம் எப்படி முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே போல் ஒவ்வொரு மாத பிறப்பிற்கும் முக்கியத்துவம் உண்டு. ஒவ்வொரு மாதம் பிறக்கும் நாளில் நாம் ஒரு சில தெய்வங்களை வணங்குவதன் மூலம் அந்த மாதம் முழுவதும் சிறப்பான பலனை பெற முடியும். அப்படியான ஒரு சூட்சும வழிபாட்டு முறையை தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம்.
சித்திரை என்றாலே அது சூரிய பகவானுக்குரிய மாதமாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த மாதத்தில் தான் அக்னி நட்சத்திரம் துவங்கும் சூரியன் உக்கிரமாக இருக்கும். இந்நேரத்தில் நாம் சொல்லக் கூடிய இந்த மந்திரமானது சூரிய பகவானை குளிர்விக்கும் விதமாக அமையும் என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் அனைத்து துன்பங்களும் நீங்கி நல்லது நடக்கக் கூடிய யோகங்களை ஏற்படுத்தும். இந்த மந்திர வழிபாட்டை மே மாதம் முதல் தேதி அன்று துவங்கி விட வேண்டும். 1ஆம் தேதி துவங்கி மே மாதம் இறுதிக்குள் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். அதற்கு மேல் சொன்னால் பலன் கிடையாது.
இந்த மந்திரத்தை 1111 முறை சொல்ல வேண்டும். அதாவது ஒன்றாம் தேதி தொடங்கி இந்த மே மாதத்தின் கடைசிக்குள் நீங்கள் 1111 முறை சொன்னால் போதும். இந்த மந்திரத்தை சொல்லும் போது வீட்டில் தீபம் ஏற்றி வைத்து விட்டு அதன் முன் அமர்ந்து சொல்லலாம். வண்டி வாகனங்களில் செல்லும் போது மட்டும் இந்த மந்திரத்தை சொல்லக் கூடாது. பெண்கள் மாத விலக்கான நேரத்தில் கூட இந்த மந்திரத்தை சொல்லலாம். எங்கு அமைதியான சூழ்நிலை உள்ளதோ அங்கு உங்களால் அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்ல முடியும் என்று தோன்றினால் அங்கு அமர்ந்து சொல்லுங்கள். நிச்சயம் மந்திரத்திற்கான பலனை முழுமையாக பெற முடியும்.
இந்த மே மாதம் முழுவதும் உங்கள் குடும்பத்திற்கு நல்லவை எல்லாம் தொடர்ந்து நடக்க இந்த ஒரு மந்திரம் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த மந்திரத்தை சொல்லி சூரிய பகவானின் அருளாசியை முழுவதுமாக பெற்று நல்லதொரு வாழ்க்கையை வாழ வழி தேடி கொள்ளுங்கள்.
Read More : கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவு..!! நிறுவனமே ஒப்புக்கொண்டதால் அதிர்ச்சி..!!