12-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் முகலாய பேரரசு தொடர்பான அத்தியாயங்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் நீக்கி உள்ளது..
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 12-ம் வகுப்பு வரலாறு பாடத்திட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி முகலாய பேரரசு தொடர்பான அத்தியாசங்களை நீக்கி உள்ளது.. இது CBSE, மற்றும் NCERT பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பிற மாநில வாரியங்கள் உட்பட அனைத்து வாரியங்களின் பாடத்திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும். திருத்தப்பட்ட பாடத்திட்டம் 2023-24 கல்வியாண்டில் அமல்படுத்தப்படும்.
இந்திய வரலாற்றின் கருப்பொருள்கள்-பகுதி II” என்ற தலைப்பில் 12 ஆம் வகுப்பு வரலாற்றிற்கான புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டத்தில், முகலாய பேரரசுகளின் வரலாறு தவிர, 12 ஆம் வகுப்பு குடிமையியல் புத்தகமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ‘உலக அரசியலில் அமெரிக்க மேலாதிக்கம்’ மற்றும் ‘பனிப்போர் சகாப்தம்’ போன்ற அத்தியாயங்கள் அகற்றப்பட்டுள்ளன, அதே நேரத்தில் ‘ஜனரஞ்சக இயக்கங்களின் எழுச்சி’ மற்றும் ‘ஒரு கட்சி ஆதிக்கத்தின் சகாப்தம்’ அத்தியாயங்கள் 12 ஆம் வகுப்பு ‘இந்திய அரசியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
இதே போல் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தையும் சில பாடப்புத்தகங்களிலும் சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.. 11 ஆம் வகுப்பு பாடப்புத்தகமான ‘உலக வரலாற்றின் தீம்கள்’ பாடத்தில் இருந்து, ‘மத்திய இஸ்லாமிய நிலங்கள்,’ ‘கலாச்சாரங்களின் மோதல்,’ மற்றும் ‘தொழில்துறை புரட்சி’ போன்ற அத்தியாயங்கள் நீக்கப்பட்டுள்ளன. 10 ஆம் வகுப்பு ‘ஜனநாயக அரசியல்-II’ பாடப்புத்தகத்தில் இருந்து ‘ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை’, ‘மக்கள் போராட்டங்கள் மற்றும் இயக்கம்’ மற்றும் ‘ஜனநாயகத்திற்கான சவால்கள்’ ஆகிய தலைப்புகள் நீக்கப்பட்டுள்ளன.