கோவை கார் குண்டுவெடிப்பு விவகாரம் தொடர்பாக மேலும் 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே, கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில், காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக தற்போது என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் தாக்குதல் நடத்தி உயிரிழப்பு ஏற்படுத்த இக்கும்பல் திட்டமிட்டது தெரியவந்தது. கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக இதுவரை 14 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். உயிரிழந்த ஜமேஷா முபினும் ஒரு குற்றவாளியாக இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றப் பத்திரிகை மற்றும் துணை குற்றப்பத்திரிகை அதிகாரிகள் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், இவ்வழக்கில் மேலும், சிலருக்கு தொடர்பு இருப்பது அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது. தற்பொழுது கோவை கார் குண்டுவெடிப்பு விவகாரம் தொடர்பாக மேலும் 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் நான்காவது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். ஷேக் இதயத்துல்லா, உமர் பரூக், பவாஸ் ரகுமான், சரண் மாரியப்பன், அபு ஹனீஃபா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தீவிரவாதத்துக்கு நிதி திரட்டியதாக 5 பேர் மீதும் குற்றச்சாட்டு வைத்துள்ளது. மொத்தமாக இதுவரை 17 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.