fbpx

தங்கும் விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம்…..! வெளியான அதிர்ச்சி தகவல் கொலையாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை…..!

மகாராஷ்டிராவின் விதார்ப்பா பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் மும்பையின் சார்ணி சாலையில் இருக்கின்ற அரசு விடுதியின் நான்காவது தளத்தில் தங்கி கல்லூரியில் படித்து வந்தார். இவருடைய அறையில் இருக்கின்ற மற்ற பெண்கள் ஊருக்கு சென்று விட்ட நிலையில் கடந்த 6ம் தேதி தனியாக அறையில் இருந்துள்ளார் இத்தகைய நிலையில், அடுத்த நாள் காலை அந்த பெண் தன்னுடைய அறையில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.

இளம் பெண்ணின் உடலை காவல்துறையினர் கைப்பற்றிய நிலையில், அவருடைய செல்ஃபோனை ஆராய்ந்து பார்த்து விசாரணை மேற்கொண்டனர். விடுதியில் காப்பாளராக பணிபுரிந்த கனோஜியா பிரகாஷ் என்பவர் சம்பவ தினத்தன்று மாயமான நிலையில், அவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போதுதான் ஒரு அதிர்ச்சி தரும் வகையில் ஆன சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது, ஓம் பிரகாஷ் ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்துள்ளது.

விடுதி பாதுகாவலர் ஓம் பிரகாஷ் தனியாக இருந்த 18 வயது மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அதன் பிறகு கொலை செய்திருக்கிறார். அதன் பிறகு காவல்துறையிடம் மாட்டிக் கொள்வோம் என்று பயந்து ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இந்த கொலை சம்பவம் குறித்து அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடக்குது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது விடுதியில் சில ஊழியர்கள் வார்டன் உள்ளிட்டவர் அங்கு தங்கியிருந்த மாணவ, மாணவிகளை தரக்குறைவாக பேசி அவமதிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அதோடு அங்கு அவ்வப்போது கண்காணிப்பு கேமராவும் சரியாக வேலை செய்வதில்லை என்றும் அந்த சூழ்நிலையில் கூட அங்கு வேலை பார்க்கும் ஆண் ஊழியர்களை பெண்கள் தங்கி இருக்கும் விடுதி பகுதிகளில் இரவு நேரத்தில் தங்க விடுதி நிர்வாகம் அனுமதி வழங்கும் என்றும் தெரியவந்துள்ளது.

அதோடு அந்த இடத்துக்கு சம்பந்தமில்லாத நபர்கள் பலர் சர்வசாதாரணமாக விடுதிக்கு வந்து செல்கிறார்கள் என்றும், பெண்கள் தங்கி இருக்கும் விடுதி பகுதியில் பணி புரியும் ஆண் ஊழியர்கள் சுய இன்பம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தோழியும், விடுதியில் தங்கி இருக்கும் சக பெண்களும் வாக்குமூலம் வழங்கி உள்ளனர்

Next Post

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது…..!

Sun Jun 11 , 2023
தர்மபுரி அருகே 9ம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய தந்தையுடன் வசித்து வருகிறார். தற்போது கோடை விடுமுறை என்பதால் வீட்டில் அவர் தனிமையில் இருந்துள்ளார். இத்தகைய நிலையில் அந்த கிராமத்தில் கடந்த 24 ஆம் தேதி கோவில் திருவிழாவில் மழை வேண்டி கிராம மக்கள் ஒன்றிணைந்து அர்ஜுனன் தவசு என்ற தெருக்கூத்தை நடத்தி உள்ளனர். அப்போது கிராம மக்கள் எல்லோரும் தெருக்கூத்து பார்த்துக் கொண்டிருந்தனர். […]

You May Like