ChatGPT என்பது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மென்பொருளாகும்.. சமீப காலமாக இந்த ChatGPT உலகளவில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.. நாம் கூகுளில் ஒரு விஷயத்தை பற்றி தேடினால், அதை பற்றி பல்வேறு ஆப்ஷன்கள் நமக்கு கிடைக்கும்.. ஆனால் இந்த ChatGPT மூலம் தேடினால், நாம் என்ன தேடுகிறோமோ அதை பற்றிய விவரங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் ஆராய்ந்து, நமக்கு தேவையான சரியான விவரத்தை மட்டுமே வழங்கும்.. மேலும் ChatGPT-யின் சுவாரஸ்யமான பதில்கள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.. கவிதை, கட்டுரை தொடங்கி ChatGPT செயலி, MBA தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது. இதனால் குறுகிய காலத்திலேயே அதிகமானோர் இந்த ChatGPT செயலியை பயன்படுத்த தொடங்கி விட்டனர்..

எனினும் இந்த ChatGPT செயலி மனிதர்கள் செய்யும் வேலையை செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.. ஆனால், ChatGPT ஏற்கனவே பணியிடங்களில் மனிதர்களுக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது.. Resumebuilder.com என்ற வேலை ஆலோசனை தளம் நடத்திய ஆய்வில், அமெரிக்காவைச் சேர்ந்த சில நிறுவனங்கள் மனிதப் பணியாளர்களுக்குப் பதிலாக ChatGPTயைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன என்பது தெரியவந்துள்ளது. 1,000 முதலாளிகள் கலந்துகொண்ட இந்த கருத்துக்கணிப்பில், கிட்டத்தட்ட பாதி அமெரிக்க நிறுவனங்கள் ChatGPT ஐப் பயன்படுத்துவதாகவும், தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை ChatGPT மாற்றியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இந்த ChatGPTன் வேலையால் தொழில் நிறுவனங்களின் அதிபர்கள் ‘ஈர்க்கப்பட்டுள்ளனர்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. 55 சதவீதம் பேர் ChatGPTஆல் தயாரிக்கப்பட்ட வேலையின் தரம் சிறப்பாக இருப்பதாகவும், 34 சதவீதம் பேர் இது மிகவும் நன்றாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.”
Resumebuilder.com இன் தலைமை தொழில் ஆலோசகர் ஸ்டேசி ஹாலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , “ChatGPT ஐப் பயன்படுத்துவதில் மிகுந்த உற்சாகம் உள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம் பணியிடத்தில் வேகமாக வளர்ந்து வருவதால், இது தற்போதைய வேலையின் பொறுப்புகளை எவ்வாறு பாதிக்கலாம் என்பதை தொழிலாளர்கள் நிச்சயமாக சிந்திக்க வேண்டும்.. ChatGPT ஐப் பயன்படுத்தி சில வேலைப் பொறுப்புகளை நெறிப்படுத்த முதலாளிகள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை இந்த கணக்கெடுப்பின் முடிவுகள் காட்டுகின்றன.” என்று தெரிவித்துள்ளார்..