ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக சம்பளம் பெரும் ஊழியர்களுக்கு வருமான வரியிலிருந்து விளக்கு அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆண்டு வருமானத்தில் இருந்து வீட்டு வாடகை, நன்கொடை ஆகிய செலவுகள் கழிக்கப்பட்டும், வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மேல் இருந்தால் மட்டுமே வருமான வரி கட்டாயமாக செலுத்த வேண்டும். ஆனால் ஒரு சிலர் வருமான வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க போலியான வீட்டு வாடகை ஆவணங்களை ஒப்படைப்பதாக புகார் எழுந்து வந்தன.
இதற்கு தீர்வு காணும் வகையில் தற்போது வருமானவரித்துறை போலியான ஆவணங்களை கண்டறிய புதிய சாப்ட்வேர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாப்ட்வேர் மூலமாகவே மாத சம்பளம் பெறும் ஊழியர்கள் ஒப்படைத்த போலியான ஆவணங்கள் கண்டறியப்பட்டு 200% வரைக்கும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், போலியான ஆவணங்களை ஒப்படைத்த ஊழியர்களுக்கு எச்சரிக்கை மற்றும் அபராத நோட்டீஸ் வழங்கப்பட்டு வருவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.