fbpx

“நீங்க காதை செக் பண்ணுங்க” மீண்டும் செய்தியாளர்களுடன் தகராறில் ஈடுபட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை..!

அதிமுக பாஜக கூட்டணிவு முறிவுக்கு பிறகு முதன் முரையாக டெல்லிக்கு செல்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. டெல்லி செல்வதற்கு முன் கோவை விமான நிலையத்தில் பத்திரிகையாளரை சந்தித்த அண்ணாமலை, “கட்சியை வலுப்படுத்துவதே எனது நோக்கம், கூட்டணி குறித்து தலைமை தான் முடிவெடுக்கும்” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர் “மாநில தலைவர் பதிவை என்பது வெங்காயம் போன்றது. யாத்திரை தொடர்பாக விவாதிக்கவே டெல்லிக்கு செல்கிறேன். யாரும் என்னிடம் அறிக்கை கேட்கவில்லை, அறிக்கை கேட்ப்பதற்கு பாஜக கார்பொரேட் கம்பெனி கிடையாது. பாஜக மீது திமுகவிற்கு பயம் வந்துவிட்டது. திராவிட முன்னேற்ற கழகம் சமூகவலைத்தளத்தை பயன்படுத்துவதே பொய்க்காக தான், அதனால் சமூகவலைத்தளத்தை பற்றி பேச தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் இல்லை. அரசியலில் என்னுடைய கருத்துக்களை எப்பவும் விட்டுக்கொடுக்க மாட்டேன், மாத்தி பேசித்தான் இருக்கணும்னா அப்படி இருக்க போறது இல்லை” என்று கூறினார்.

அப்போது பெண் பத்திரிக்கியாயாளர் ஒருவர் “பாஜகவில் மாநில தலைவர் பதவியில் இல்லைனா பாஜகவில் தொடர்ந்து செயல் படுவீர்களா” என்று கேள்வி எழுப்பினார், இதற்கு கோவப்பட்ட அண்ணாமலை செய்தியாளரை முன்னே வந்து நில்லுங்க, கேள்வி கேட்க மரபு இருக்கு என்று கூறி பத்திரிக்கையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் ஒரு பத்திரிகையாளரை “காதை நீங்க செக் பண்ணுங்க” என்றும் “journalisam போய் படிச்சிட்டு வாங்க என்றும்” வாக்குவாதம் செய்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிக்கையாளரிடம் இப்படி நடந்துகொள்வது முதல் முறை இல்லை.

Kathir

Next Post

செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.63 லட்சம் கோடி..! மத்திய அரசு மாநில ராசு வருவாய் எவ்வளவு தெரியுமா..!

Sun Oct 1 , 2023
இந்திய அரசாங்கத்தின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் செப்டம்பர் மாதத்தில் 10.2 சதவீதம் உயர்ந்து 1.63 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்று நிதி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. மேலும் இது ஆகஸ்ட் மாத வசூலை விட செப்டம்பர் மாதத்தில் 2.3 சதவீதம் அதிகம் என்று தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து ஏழாவது மாதமாக மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் ரூ.1.5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. சமீபத்திய ஜிஎஸ்டி தரவு 2023-24ல் […]

You May Like