fbpx

GCC Budget | பள்ளிகளில் சிசிடிவி கேமரா, மாணவர்களுக்கு பள்ளிச் சீருடைகள்..!! பட்ஜெட்டில் அறிவிப்பு..!!

சென்னை மாநகராட்சியின் 2024 – 2025ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று தாக்கல் செய்தார்.

Chennai Budget | இந்த பட்ஜெட்டில், 2024-25ஆம் கல்வியாண்டில் 117 சென்னை தொடக்கப் பள்ளிகள் மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்ட மண்டலங்கள் 1, 2, 3, 7, 11, 12, 14 மற்றும் 15 ஆகியற்றிலிருந்து இணைக்கப்பட்ட 138 பள்ளிகள் என மொத்தம் 255 பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் பாதுகாப்பு நலன் கருதி தலா பள்ளி ஒன்றுக்கு 4 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். இதற்காக ரூ.7.64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 2024-25ஆம் கல்வியாண்டில் மொத்தம் 419 பள்ளிகளில் பயிலும் எல்கேஜி வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தலா 2 எண்ணிக்கை வீதம் 1,20,175 மாணவர்களுக்கு பள்ளிச் சீருடைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.8.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 2024-25ஆம் கல்வியாண்டில் 5ஆம் வகுப்பு வரையிலான 64,022 மாணவர்களுக்கு ஒரு ஜோடி காலணி மற்றும் இரண்டு ஜோடி காலுறைகள் வழங்கப்படும். இதற்காக ரூ.3.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Read More : Annamalai | பாஜகவுக்கு தாவும் MLA-க்கள்..? அண்ணாமலை சொன்ன சூசக பதில்..!! அலர்ட் ஆகும் அரசியல் தலைவர்கள்..!!

Chella

Next Post

கொடூரம்.! அரை நிர்வாணமாக்கப்பட்ட திருநங்கை.. IT ஊழியருக்கு நேர்ந்த பயங்கரம்.!

Wed Feb 21 , 2024
சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் திருநங்கையை, குழந்தைகளை கடத்துபவர் என்று தவறாக எண்ணி, அவரை சிலர் தாக்கியுள்ளனர். அந்த திருநங்கை அரை நிர்வாணமாக்கி மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் பேரில் இருவர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை குரோம்பேட்டையில், 25 வயதுடைய, பம்மல் பகுதியில் வசிக்கும் திருநங்கை ஒருவர் இரவு […]

You May Like