சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள வாகன ஓட்டுநர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி ஓட்டுநர் பணிக்கு காலியாக உள்ள 13 இடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு இலகு ரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்கும் நபர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆகவும் உச்சபட்ச வயது வரம்பு 32 ஆகவும் இருக்க வேண்டும். எஸ்.சி/எஸ்.டி மற்றும் பி.டபிள்யு.டி பணியாளர்களுக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பிற்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஊதியமாக மாதம் Rs.19500/- வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க 500 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் மற்றும் பி.டபிள்யு.டி பணியாளர்களுக்கு கட்டணம் இல்லை. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 13.02.2024 தேதிக்குள் இணையதளம் மூலமாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற விவரங்களை அறிய tamilnadurecruitment.in என்ற முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.