தமிழ்நாட்டிலேயே சென்னைதான் டாப்!! 105 பாரன்ஹிட் வெப்பம் பதிவு!! இன்றும் வெயில் உக்கிரமாக இருக்கும்!!

சென்னையில்தான் அதிகப்பட்சமாக நேற்று 105 பாரன்ஹிட் வெப்பம் பதிவாகியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் 40.6 டிகிரி சென்டிகிரேட்டும், மீனம்பாக்கத்தில் 40.6 டிகிரி சென்டிகிரேட்டும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தமிழகத்தி அதிக வெப்பமான பகுதிகள் என்றால் அவை இந்த இரண்டும்தான்.

இன்றும் பாரம்பட்சம் இல்லாமல் வெயில் தகிக்கும். இந்த ஆண்டின் முதல் முறையாக நுங்கம்பாக்கத்தில் 40 டிகிரி வெப்பநிலையை தாண்டியுள்ளது. இதற்கு முன்பு 39 டிகிரி சென்டிகிரேட்டாக கடந்த மே 1 ஆம் தேதி இருந்தது. கடந்த 2004 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் 40 டிகிரி சென்டிகிரேட்டைவிட குறைவாக வெப்பம் மே மாதம் இருந்தது தற்போது கனவாகிவிட்டது. இத்தனைக்கு நுங்கம்பாக்கத்தை ஒப்பிட்டால் மீனம்பாக்கம் கடற்கரையிலிருந்து தூரமாகத்தான் இருக்கிறது, இதற்கே 40 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் அதிகரித்துள்ளது. இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் ஹீட் வேவ் இருக்கும். ராணிப்பேட்டை , வேலூரிலும் ஹீட் வேவ் இருக்கும். தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் ஹீட் வேவ் இருக்காது. கன்னியாகுமரியில் பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வானிலை மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில்: 27.05.2024 முதல் 31.05.2024 வரை; தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யவாய்ப்புள்ளது. அடுத்த சில தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: 27.05.2024 டூ 29.05.2024: அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3° செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும்

27.05.2024: அடுத்த 24 மணி நேரத்திற்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பாகவும்/இயல்பை விட சற்று குறையக்கூடும். 27.05.2024: அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பை ஒட்டி இருக்கக்கூடும். 27.05.2024 முதல் 29.05.2024 வரை: அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பாகவும் / இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகள்: 25.05.2024 முதல் 27.05.2024 வரை: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

Baskar

Next Post

செம்ம வாய்ப்பு...! TNPSC குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு...! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்...!

Tue May 28 , 2024
சேலம் மாவட்டத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி-1 முதல்நிலை தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) தொகுதி 1 -இல் அடங்கிய பணிக்காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பபட்டுள்ளது. இத்தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்பு சேலம், ஏற்காடு சாலை, கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள […]

You May Like