fbpx

சென்னைக்கு ஒரு வாரம் பிரேக்.. இந்த மாவட்டங்களில் மழை பிச்சு உதறபோகுது..!! – வெதர்மேன் அலர்ட்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 9 நாட்கள் கழித்து மீண்டும் மழை தொடங்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை இல்லை என்றாலும் திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது.

இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பதாவது: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு 9 நாட்களுக்கு பிரேக்! 9 நாட்கள் கழித்து மழை தொடங்கும் என தெரிவித்துள்ளார். சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 19-11-2024 முதல் 23-11-2024 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Read more ; பெண்கள் தான் தாலி கட்டிக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை..!! – உதயநிதி

English Summary

Chennai, Kanchipuram, Thiruvallur, Chengalpattu districts will start raining again after 9 days according to Tamil Nadu Weatherman.

Next Post

சென்னை ICF நிறுவனத்தில் வேலை.. நல்ல சம்பளம்.. தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

Sun Nov 17 , 2024
ICF factory in Chennai has published a notification to fill the vacant posts.

You May Like