fbpx

உஷார்…! வரும் 22, 23 ஆகிய தேதிகளில் மழை…! பலத்த காற்றுடன் மீனவர்களுக்கு எச்சரிக்கை…!

அடுத்த 3 நாள்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று மற்றும் நாளை வறண்ட வானிலையே நிலவக்கூடும். மேலும் உள்மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது.

’இந்த 2 நாட்களும் கொஞ்சம் கவனமா இருங்க மக்களே’..!! அலெர்ட் கொடுத்த வானிலை மையம்..!!

வரும் 22, 23 ஆகிய தேதிகளில் தென் தமிழ்நாடு மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்கள் மற்றும் புதுவைப் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 முதல் 21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

இன்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் வடகிழக்குத் திசையிலிருந்து பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. காங்கிரஸ் வேட்பாளர் யார்..? கே.எஸ். அழகிரி சொன்ன முக்கிய தகவல்..

Fri Jan 20 , 2023
2021- சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.. அதன்படி அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.. இதனிடையே கடந்த 4-ம் தேதி திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானார். இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை […]

You May Like