fbpx

#Rain: 20-ம் தேதி இந்த 9 மாவட்டங்களுக்கு மட்டும்…! எல்லாம் உஷாரா இருங்க…! வானிலை மையம் தகவல்…!

20-ம் தேதி 9 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழ்நாடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், வரும் 20-ம் தேதி தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழ்நாடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் 21-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 முதல் 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பரபரப்பு.‌‌..! அடுத்த உத்தரவு வரும் வரை மிசோரமில் ஆளுநர் ஆட்சி அமல்..‌.! அதிரடி நடவடிக்கை...!

Sun Dec 18 , 2022
மிசோரமில் அரசியல் ரீதியாக நிலையற்ற பழங்குடியினர் கவுன்சிலில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு சக்மா சமூகத்தின் ஒரு அமைப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது. டிசம்பர் 16 அன்று, மிசோரமின் மாவட்ட கவுன்சில் மற்றும் சிறுபான்மையினர் விவகாரத் துறையின் அறிவிப்பில், சக்மா தன்னாட்சி மாவட்ட கவுன்சில் வழங்கப்பட்ட அல்லது செயல்படுத்தக்கூடிய அனைத்து செயல்பாடுகள் அல்லது அதிகாரங்களை அடுத்த உத்தரவு வரும் வரை ஆறு மாதங்களுக்கு மாநில ஆளுநர் ஏற்றுக்கொண்டார். அரசியல் சூழ்ச்சியால் தொடர்ந்து ஏற்படும் […]

You May Like