சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் முதுகலை மற்றும் பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி ஜெனரல் மேனேஜர் மற்றும் துணைநிலை ஜெனரல் மேனேஜர் பணிகளுக்கான இடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகளுக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 24.02.2023 ஆகும். இந்த வேலைகளுக்கான கல்வி தகுதியாக ஜெனரல் மேனேஜர் பணிக்கு முதுநிலை வணிக மேலாண்மையில் சந்தைப்படுத்துதல் பிரிவு அல்லது நிதி மேலாண்மையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் மிக்கவராக இருக்க வேண்டும். துணைநிலை ஜெனரல் மேனேஜர் பணிகளுக்கு இளநிலை பொறியியல் படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 17 வருடங்கள் அனுபவம் மிக்கவராக இருக்க வேண்டும். ஜெனரல் மேனேஜர் காண வயது வரம்பு 45 வயது முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் துணை நிலை ஜெனரல் மேனேஜர் காண வயதுவரம்பு 47 ஆகும்.
ஜெனரல் மேனேஜருக்கு சம்பளமாக மாதம் ஒன்றுக்கு 2.25.000 ரூபாயும் துணைநிலை ஜெனரல் மேனேஜருக்கு மாதச் சம்பளமாக 1.50.000 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பித்தவர்களில் இருந்து தகுதியான நபர்கள் நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தப் பணிக்கு தகுதியுடைய நபர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சென்னை மெட்ரோ ரயில்வேஸ் லிமிடெட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த மாதம் 24 ஆம் தேதிக்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பித்த பின் சுய சான்றளிக்கப்பட்ட கல்விச்சான்றுகளின் பிரதியையும் சாதிச் சான்றிதழ் பிறப்புச் சான்றிதழ் இதற்கு முன் வேலை பார்த்த அனுபவ சான்றிதழ் மற்றும் அனைத்து ஆவணங்களையும் கூடுதல் பொது மேலாளர் (HR), சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட், மெட்ரோ அண்ணா சாலை, நந்தனம், சென்னை – 600 035. என்ற முகவரியில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.