fbpx

மக்களே கவனம்…! இந்த 16 மாவட்டத்தில் கனமழை…! வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை…!

தமிழகத்தில் இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதேபோல்‌, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ வரும்‌ 30-ம்‌ தேதி அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

மேலும் குறிப்பாக, இராணிப்பேட்டை, வேலூர்‌, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, தேனி, திண்டுக்கல்‌, சேலம்‌, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, கரூர்‌ மற்றும்‌ நாமக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஓரிரு இடங்களில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்.

Vignesh

Next Post

வாட்ஸ் அப் நிறுவனத்தின் அசத்தல் அப்டேட்..!! இனி அனைத்தும் அட்மின் கையில்..!!

Thu Apr 27 , 2023
வாட்ஸ் அப் செயலியை சிலர் தவறுகளாக பயன்படுத்துவதை தவிர்க்க மெட்டா நிறுவனம் புதிய கட்டுப்பாடு ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதன்படி, குழுக்களில் யாரெல்லாம் சேரலாம், யாரெல்லாம் சேரக்கூடாது என்பதை தீர்மானிக்க புதிய வழிமுறைகளை மெட்டா நிறுவனம் வழிவகை செய்துள்ளது‌. குறிப்பாக குழுவில் உள்ள உறுப்பினர்கள் தேவையற்ற செய்திகளை அனுப்பினால் அவற்றை அட்மின் டெலிட் செய்யலாமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட்டை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வெர்ஷனில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வாட்ஸ் […]

You May Like