fbpx

இன்று எந்தெந்த மாவட்டத்தில் கனமழை பெய்யும்…? வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை…!

தமிழகத்தில் இன்று 11 மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை‌33 முதல் 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

டெங்கு போய் இப்ப சிக்குன்குனியா...! இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு பாதிப்பு உறுதி...!

Mon Oct 16 , 2023
தமிழகத்தில் டெங்கு பாதிப்பானது குறைந்துள்ள நிலையில் தமிழகத்தில் சிக்குன்குனியா காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது. தமிழகத்தில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் மற்றும் மழையால் ஏற்படும் தொற்றுநோய்கள் ஆகியவை பரவுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சாலை மற்றும் தெருக்களில் நீண்ட நாட்களாக மழைநீர் தேங்கி கொசுப்புழு உற்பத்தியாக வாய்ப்புள்ள காரணத்தால் அவற்றை அகற்றும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்பொழுது டெங்கு பாதிப்பானது குறைந்துள்ள நிலையில் தமிழகத்தில் சிக்குன்குனியா […]

You May Like