fbpx

தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு…! வானிலை மையம் தகவல்…!

தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ இன்று ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ நாளை முதல்‌ 31-ஆம்‌ தேதி வரை ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

அஸ்ஸாமின் முதல் வந்தே பாரத் விரைவு ரயில்...! மதியம் 12 மணிக்கு தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி...!

Mon May 29 , 2023
அஸ்ஸாமின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலை இன்று மதியம் 12 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அதிநவீன வந்தே பாரத் விரைவு ரயில் இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும். கவுகாத்தியை நியூ ஜல்பைகுரியுடன் இணைப்பதில், தற்போதைய அதிவேக ரயிலுடன் ஒப்பிடும் போது, இந்த ரயில் சுமார் ஒரு மணிநேர பயண நேரத்தை மிச்சப்படுத்தும். வந்தே பாரத் ரயில் இந்தப் பயணத்தை 5 […]

You May Like