fbpx

தமிழகத்தில் 30-ம்‌ தேதி வரை ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மழை…!

தமிழகத்தில் 30-ம்‌ தேதி வரை ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ இன்று முதல்‌ 30-ம்‌ தேதி வரை ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்‌.

இன்று, மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌, இடையிடையே 65 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌ என்பதால்‌ மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இந்தியா முன்பு போல் இல்லை...! பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்...!

Tue Jun 27 , 2023
இந்தியா முன்பு இருந்ததைப் போல இல்லை என்றும், நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேவை ஏற்பட்டால் எல்லை தாண்டி இந்தியா தாக்குதல் நடத்தும் என்றும், நாடு முன்பு இருந்ததைப் போல இல்லை என்றும் நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதாகவும் கூறினார். பாகிஸ்தானில், எல்லை தாண்டிய பயங்கரவாதிகள், புல்வாமாவில் தாக்குதல் நடத்திய போது, […]

You May Like