fbpx

மக்களே எல்லாம் ஜாக்கிரதையா இருங்க… இந்த மாவட்டத்தில் எல்லாம் வெளுத்து வாங்கப் போகும் கனமழை…!

தமிழகத்தில் இன்று முதல் 12-ம் வருகின்ற தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் நாளை முதல் 12-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

லட்சத்தீவு பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், தெற்கு வங்கக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது‌.

Vignesh

Next Post

தமிழகத்தில் அடுத்த மாதம் முதல்... மின்கட்டண உயர்வு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன தகவல்...

Fri Sep 9 , 2022
தமிழகத்தில் திருத்திய மின் கட்டண உயர்வு அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.. சென்னை தலைமை செயலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது “ தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, மின் வாரிய அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு இடங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதி கொண்ட பாயிண்ட் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு […]
மின்சார சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறும் வரை...! - அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

You May Like