fbpx

#RainAlert: காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வரும் 15-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு..‌!

தமிழகத்தில் வரும் 15-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு ஒடிசா நோக்கி நகர உள்ளது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 13 முதல் 15-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். இன்று முதல் 14-ம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் இலங்கை கடற்கரை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆகவே மேற்கூறிய நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது‌.

Vignesh

Next Post

#Tngovt; 10 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை.‌‌..! 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்...!

Mon Sep 12 , 2022
தமிழக அரசு சார்பில் படித்து வேலைவாய்ப்பு இல்லாத நபர்களுக்கு மாதம் தோறும் வழங்கப்படும் உதவித்தொகைக்கு வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தமிழக அரசின்‌ சார்பில்‌ படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும்‌ திட்டம்‌ செயற்படுத்தப்பட் டு வருகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம்‌ ஒன்றுக்கு ரூ.200 வழங்கபடுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-யும், 12-ம்‌ படித்தவர்களுக்கு ரூ.400-யும், பட்டதாரிகளுக்கு ரூ.600 தமிழக அரசால் வழங்கபடுகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு […]

You May Like