fbpx

மக்கள் எச்சரிக்கையா‌ இருங்க… 29 மாவட்டத்தில் இன்று கனமழை…! வானிலை மையம் கணிப்பு…!

திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட 29 மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ஹ

வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மிக கனமழையும், கனமழையும் பெய்யும்..!! எந்தெந்த மாவட்டங்களில் எப்படி இருக்கும்..?

நாளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

வரும் 20-ம் தேதி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மகளுடன் காதல் மனைவியுடன் கள்ளக்காதல்..!! கண்டித்த கணவரை தீவைத்து எரித்துக் கொன்ற பயங்கரம்..!!

Mon Oct 17 , 2022
காதல் விவகாரத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து, குடும்ப தலைவனை குடும்பமே அடித்துக் கொன்று தீவைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனையை அடுத்த அச்சங்குளம் கிராமத்திற்கு மேற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் இருக்கும் விவசாய நிலத்தில் ஆண் உடல் ஒன்று எரிந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பசுவந்தனை போலீசார், உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். இதில், தீ வைத்து எரிக்கப்பட்டவர் குருவிநத்தம் […]
மகளுடன் காதல் மனைவியுடன் கள்ளக்காதல்..!! கண்டித்த கணவரை தீவைத்து எரித்துக் கொன்ற பயங்கரம்..!!

You May Like