fbpx

Alert: வரும் 24-ம் தேதி உருவாக போகும் புயல்…! இந்த மாவட்டத்தில் எல்லாம் கனமழை எச்சரிக்கை…!

அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்குச்சுழற்சி நேற்று காலை அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும் ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, அக்டோபர் 23-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.

பிறகு வடதிசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக 24-ம் தேதி வலுபெறக்கூடும். பிறகு 25-ம் தேதி மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேச கடற்கரை நோக்கி நகரக்கூடும்.

தொடர் கனமழை..!! வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு..!! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!!

இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், மேலும் வரும் 24-ம் தேதி ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Vignesh

Next Post

இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு ரூ.1.40 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!! உடனே பதிவு செய்யுங்க..!

Fri Oct 21 , 2022
நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTPC) என்பது இந்திய அரசின் மின்சக்தி அமைச்சகத்தின் உரிமையின் கீழ் உள்ள ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனமாகும். இது மின்சாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதன் தலைமையகம் புது டெல்லியில் அமைந்துள்ளது. இதன் முக்கிய செயல்பாடு, நாட்டில் உள்ள மாநில மின்சார வாரியங்களுக்கு மின்சாரம் உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகும். பொறியியல், திட்ட மேலாண்மை, கட்டுமான மேலாண்மை மற்றும் மின் […]
இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு ரூ.1.40 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!! உடனே பதிவு செய்யுங்க..!

You May Like