fbpx

நாளை தொடங்கும் பருவமழை…! 4 நாட்களுக்கு வெளுத்து வாங்க போகும் கனமழை…! வானிலை மையம் தகவல்

வரும் 31-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

#Breaking..!! தொடர் மழை..!! தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு..!!

நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 31-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Vignesh

Next Post

ரூ.10,000 கோடி கடந்தது சாதனை...! மத்திய எஃகு ஆணையம் விளக்கம்...!

Fri Oct 28 , 2022
அரசு மின்னணு சந்தை இணைய தளம் தொடங்கப்பட்டதில் இருந்து ரூ.10,000 கோடிக்கு மேல் கொள்முதல் செய்துள்ள முதல் மத்திய பொதுத்துறை நிறுவனமாக இந்திய எஃகு ஆணையம் திகழ்கிறது. கடந்த 2018-19 நிதியாண்டில் ரூ.2.7 கோடி என்ற சிறிய அளவில் கொள்முதலை தொடங்கிய இந்திய எஃகு ஆணையம் இந்த ஆண்டு கொள்முதல் மதிப்பை ரூ.10,000 கோடியாக கடந்தது. முந்தைய நிதியாண்டில் ரூ.4,614 கோடி அளவிற்கு கொள்முதல் செய்து அரசு மின்னணு சந்தை […]

You May Like