fbpx

தமிழகத்தில் நவம்பர் 2-ம் தேதி வரை கனமழை…! இந்த மாவட்டத்தில் உள்ள மக்கள் எல்லாம் உஷார்…!

தமிழகத்தில் 2-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வடகிழக்கு பருவ மழை தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளிலும் , புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் துவங்கியது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 2-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை ,வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Vignesh

Next Post

நவ.1 முதல் பைக்கில் செல்லும் இருவருக்குமே ஹெல்மெட் கட்டாயம்..!! ரூ.25,000 வரை அபராதம்..!! பரபரப்பு உத்தரவு

Sun Oct 30 , 2022
புதுச்சேரியில் நவ. 1ஆம் தேதி முதல் போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதுவை போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ”ஒரு பக்க பார்க்கிங் புதுவை நகரப் பகுதியில் அதிகரித்து வரும் நிலையில், வாகன போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டு பொதுமக்களின் நலன்கருதி வருகிற 1ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. எனவே பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள் இந்த போக்குவரத்து […]

You May Like