fbpx

வரும் 23-ம் தேதி வரை கனமழை…! எந்தெந்த மாவட்டங்களில்…? வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும்.

இது மேலும் அதற்கடுத்த இரண்டு தினங்களில் மேற்கு – வடமேற்கு திசையில் தமிழ்நாடு – புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 22-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 23-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Vignesh

Next Post

குட் நியூஸ்...! ஏற்றுமதி மீதான வரியை அரசு திரும்பப் பெற்ற மத்திய அரசு...!

Sun Nov 20 , 2022
எஃகு மீதான ஏற்றுமதி வரியை அரசு திரும்பப் பெற்றுள்ளது. 2022, மே 22க்கு முன்பிருந்த நிலையை மத்திய அரசு மீட்டெடுத்துள்ளது. மேலும் 58% இரும்பு உள்ளடக்கத்திற்குக் குறைவான இரும்புத் தாதுக் கட்டிகள் மற்றும் குறைந்த தரமுள்ள தாதுக் கட்டிகள், இரும்புத் தாதுத் துகள்கள் மற்றும் பன்றி இரும்பு உள்ளிட்ட குறிப்பிட்ட எஃகு பொருட்கள் மீதான ஏற்றுமதி வரியை திரும்பப் பெற்றுள்ளது. ஆந்த்ராசைட் / பிசிஐ நிலக்கரி, கோக்கிங் நிலக்கரி, கோக் […]

You May Like