fbpx

வரும் டிசம்பர் 1-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு…! சென்னை வானிலை மையம் கணிப்பு…!

டிசம்பர் 1-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ்சாகவும், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் அளவிலும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கு எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

நோய் இன்றி நீண்ட நாள் நலமாக வாழவேண்டுமா.. அதற்கான வழிமுறைகள்..!

Mon Nov 28 , 2022
நம் அன்றாட வாழ்வில் ஏதாவது ஒரு நோய்களுக்கு நாம் அடிமையாகி கொண்டு இருக்கிறோம். இதனில் இருந்து விடுபெற சிறந்த வழிகளை இங்கே காணலாம்.  நாள்தோறும் 4 பாதாம் பருப்புகளை உண்டு வருவதால் உடலில் இருக்கும் தேவையற்ற பல கொலஸ்ட்ரால் கரைய செய்கிறது. அத்துடன் அரை டீஸ்பூன் அளவு கசகசா சேர்த்துக் கொண்டால் இன்னும் நல்லது. கசகசா சேர்ப்பதனால உடலில் உள்ள எலும்புகள் வலுவடையும். மேலும், ஒரு டீஸ்பூன் வெந்தயத்தினை சேர்த்துக் […]

You May Like