fbpx

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…! டிசம்பர் 3-ம் தேதி வரை வெளுத்து வாங்க போகும் கனமழை…!

தமிழகத்தில் 3-ம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கேரள பகுதிகளில் நிலவும் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று மற்றும் நாளை நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 2, 3 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 23 முதல் 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மீனவர்களுக்கு எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லை.

Vignesh

Next Post

டிசம்பர் 6, இந்த மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு

Wed Nov 30 , 2022
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது. சாமி வீதியுலாவை பக்தர்கள் தினமும் கண்டு மகிழ்கின்றனர். இந்த விழாவின் 10ஆம் நாளான டிசம்பர் 6 திருக்கார்த்திகை தீபம் அன்று மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும். இதனையொட்டி பொதுமக்கள் அனைவரும் அவர்களது வீடுகளில் விளக்கேற்றி கார்த்திகை தீபத்தை கொண்டாடுவர். இந்நிலையில், திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு வருகிற டிசம்பர் 6ஆம் […]

You May Like