fbpx

இன்று கடலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை…! சென்னை வானிலை மையம்

தமிழகத்தில் கடலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழ்நாடு மாவட்டங்கள், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், வரும் 28,29 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

இன்று அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. இந்த மாவட்டத்தில் மட்டும் தான்..

Tue Jul 26 , 2022
அரியலூர் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள உலக புகழ் பெற்ற பிரகதீஸ்வரர் ஆலயத்தை நிறுவியர் மாமன்னர் ராஜேந்திர சோழன்.. தமிழ்நாட்டில் பல நகரங்கள், கிராமங்களை உருவாக்கிய ராஜேந்திர சோழன் இந்தியாவை தாண்டி அயல் நாடுகளிலும் சோழர்களின் ஆட்சியை நிலைநிறுத்தினார்.. ராஜராஜசோழனின் மகனான ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடி திருவாதிரை நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே […]

You May Like