fbpx

இடி மின்னலுடன் அடுத்த 3 நாட்கள் வெளுக்க போகும் கனமழை…! மீனவர்களுக்கு எச்சரிக்கை…!

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை நிலவரப்படி நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 320 கிலோமீட்டர் தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது தென்மேற்கு மற்றும் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலையில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவக்கூடும்.

’இந்த 2 நாட்களும் கொஞ்சம் கவனமா இருங்க மக்களே’..!! அலெர்ட் கொடுத்த வானிலை மையம்..!!

இதன் காரணமாக, இன்று, தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

வரும் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

சீனாவில் இருந்து ஆக்ரா வந்த நபருக்கு கொரோனா!!! கட்டுப்பாடுகள் தீவிரம்..!

Mon Dec 26 , 2022
சீனாவில் தற்போது வேகமெடுத்து வரும் கோவிட் BF.7 வகை வைரஸ் மற்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. இந்தியாவில், குஜராத் மற்றும் ஒடிசாவில் கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் உத்தரபிரதேச நாவடட்டம் ஆக்ராவின் ஷாகஞ்ச் பகுதியில் வசிக்கும் இந்த 40 வயது நபர், டிசம்பர் 23 அன்று சீனாவில் இருந்து வந்துள்ளார். அதன்பிறகு அவருக்கு தனியார் ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது, அந்த பரிசோதனையின் அறிக்கையில், சீனாவில் இருந்து வந்த நபருக்கு […]

You May Like