fbpx

தமிழகத்தில் வரும் 16-ம் தேதி வரை வறண்ட வானிலை.‌‌..! மழைக்கு வாய்ப்பு இல்லை…!

16-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் அதனை ஒட்டிய கடலோர பகுதிகளில் இருந்து விலக வாய்ப்பு உள்ளது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.

நாளை முதல் 16-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை 20 முதல் 21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லை.

Vignesh

Next Post

மக்களே...! 2023 ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது....! இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் அறிவிப்பு...!

Fri Jan 13 , 2023
பாசுமதி அரிசிக்கான தரத்தை நிர்ணயம் செய்ய எஃப்எஸ்எஸ்ஏஐ முடிவு 2023 ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது ‌. நாட்டிலேயே முதன் முறையாக பாஸ்மதி அரசிக்கு தரத்தை நிர்ணயம் செய்ய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் முன்வந்துள்ளது. இதற்காக உணவு தரம் மற்றும் பாதுகாப்பு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த விதியின்படி, இயற்கை நறுமணம் கொண்ட பாஸ்மதி அரிசி […]

You May Like