fbpx

கவனம்…! நீலகிரி மற்றும் கோவையில் இரவு நேரத்தில் பனிமூட்டம்…! வானிலை மையம் தகவல்…!

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும், உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது.

நாளை முதல் 17-ம் தேதி வரை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும், காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பிரபல நடிகர் உடல் நலக்குறைவால் காலமானார்...! சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்...!

Sat Jan 14 , 2023
பிரபல மராத்தி நடிகர் சுனில் உடல் நலக்குறைவால் காலமானார். பிரபல நடிகர் சுனில் ஹோல்கர் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 40. சுனில் ஹோல்கரின் மரணம் மராத்தி திரை உலகில் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பெற்றோர், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுனில் பல மராத்தி ஹிந்தி தொடர்களிலும், திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார். சுனிலின் கடைசிப் படைப்பு தேசிய விருது பெற்ற கோஷ்டா ஏக பைதானிச்சி […]

You May Like