fbpx

கவனம்…! அடுத்த 2 நாட்களுக்கு வானிலை இப்படி தான் இருக்கும்…!

அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே வரும் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். மேலும் உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது.

நாளை முதல் 20-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

Vignesh

Next Post

குஷியில் மாணவர்கள்...!பள்ளி நேரங்களில் மாற்றம்...! வரும் 22-ம் தேதி வரை மட்டுமே தான்...! அரசு உத்தரவு...!

Tue Jan 17 , 2023
ராஜஸ்தானில் நிலவும் கடுமையான குளிர் காரணமாக, உதய்பூர் மாவட்ட ஆட்சியர், அனைத்துப் பள்ளிகளையும் இன்று மற்றும் நாளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளார். உத்தரவு படி, ஜனவரி 18-ஆம் தேதி வரை 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மூடப்படும். இந்த உத்தரவு அரசு‌ மற்றும் தனியார் பள்ளிகள் அனைவருக்கும் பொருந்தும். வரவிருக்கும் நாட்களில் வெப்பநிலை குறைவதால் குளிர் அலையின் சாத்தியத்தை கருத்தில் கொண்டு, உதய்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் […]

You May Like