fbpx

ஆரம்பமாகும் கோடை காலம்…! தமிழகத்தில் 16-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும்…!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலையே நிலவக்கூடும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.

நாளை முதல் 16-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கக்கூடும். மீனவர்களுக்கு எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லை என தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

பிஎஃப் பயனர்களுக்கு நற்செய்தி.. வட்டித்தொகை குறித்து விரைவில் வெளியாக உள்ள முக்கிய அறிவிப்பு..

Mon Feb 13 , 2023
நாட்டில் உள்ள 6.5 கோடி ஊழியர்கள் மற்றும் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு விரைவில் நல்ல செய்தியை வழங்க உள்ளது. பிஎஃப் தொகைக்கான வட்டிப் பணம் ஹோலிக்கு முன், அதாவது மார்ச் முதல் வாரத்தில் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இம்மாதம் அல்லது மார்ச் முதல் வாரத்தில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு முக்கிய முடிவு எடுக்கும் என்று தெரிகிறது. அதன்படி, 8.1 சதவீத வட்டி விகிதத்தைப் பெறலாம், […]

You May Like