fbpx

தமிழகத்தில் 27,28 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்..‌.! வானிலை மையம் தகவல்…!

டெல்டாவில் 27,28 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்க கூடும். 27, 28 ஆகிய தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும். இன்னும் ஓரிரு நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து பனியின் தாக்கம் குறையும். பகல் நேரங்களில் முன்பை விட வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் காணப்படும். மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் கிடையாது.

Vignesh

Next Post

மகாராஷ்டிராவில் இரண்டு நகரத்தின் பெயர்களை மாற்ற மத்திய அரசு ஒப்புதல்...!

Sat Feb 25 , 2023
அவுரங்காபாத் மற்றும் உஸ்மானாபாத் பெயர்களை மாற்ற மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத்தை சத்ரபதி சம்பாஜிநகர் என்றும், உஸ்மானாபாதை தாராஷிவ் என்றும் பெயர் மாற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அவுரங்காபாத் மற்றும் உஸ்மானாபாத் நகரங்களின் பெயர்கள் முறையே சத்ரபதி சம்பாஜி நகர் மற்றும் தாராஷிவ் என மறுபெயரிடப்பட்டுள்ளன. இந்த இரண்டு நகரங்களின் பெயர்களை மாற்ற ஒப்புதல் அளித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு மகாராஷ்டிர துணை […]

You May Like