fbpx

வெயிலுக்கு மத்தியில் மிதமான மழை பெய்யக்கூடும்…! சென்னை வானிலை மையம் தகவல்…!

தென் தமிழக மாவட்டங்களில் 11-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 11-ம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 12-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்க கூடும். கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லை. வழக்கம் போல கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம்.

Vignesh

Next Post

மீண்டும் டிடி நேஷனல் தொலைக்காட்சியில் ஸ்வராஜ் தொடர்...! எப்போது தெரியுமா...?

Thu Mar 9 , 2023
வரும் பிப்ரவரி 11, 2023 முதல் மதியம் ஒருமணிக்கு டிடி நேஷனல் தொலைக்காட்சி ஸ்வராஜ் தொடரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் ஒளிபரப்பு செய்யவுள்ளது. ஸ்வராஜ் – 75 அத்தியாயங்களைக் கொண்ட தொடர் – இந்தியாவிற்கு வாஸ்கோடகாமா வந்த காலம் தொட்டு, 15-ம் நூற்றாண்டிலிருந்து இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களின் புகழ்பெற்ற வரலாற்றை வெளிக்கொண்டு வருவதுதான் இதன் நோக்கமாகும். குறிப்பாக, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட நன்கு அறியப்படாதவர்களின் வாழ்க்கை மற்றும் […]

You May Like