fbpx

வரும் 27-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..‌.! வானிலை மையம் கணிப்பு…!

தமிழகம் மற்றும், புதுச்சேரி பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை முதல் வரும் 27-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் இல்லை என தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

செம வாய்ப்பு...! வாரம் 3,000 ரூபாய் உதவித்தொகையுடன் கூடிய படிப்பு...! உடனே விண்ணப்பிக்கவும்...!

Fri Mar 24 , 2023
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் தமிழ்ச் சுவடியியல் (ம) பதிப்பியல் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். உலகத்‌ தமிழாராய்ச்சி நிறுவனத்தால்‌ இதுவரை பலநூறு ஓலைச்சுவடிகள்‌ களப்பணி வாயிலாகக்‌ கண்டெடுக்கப்பட்டு நிறுவனத்தில்‌ அமைக்கப்பட்டுள்ள ஓலைச்சுவடிகள்‌ பாதுகாப்பு மையத்தில்‌ பாதுகாக்கப்பட்டு வருகின்றன.பாதுகாக்கப்பட்டு வரும்‌ ஓலைச்சுவடிகளை அறிந்து தெரிந்து கொண்டு நூலாக்கம்‌ செய்யும்‌ வகையில்‌ தமிழ்ச்‌ சுவடியியல்‌ மற்றும்‌ பதிப்பியல்‌ பட்டயப்‌ படிப்பு உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில்‌ 2013-ம்‌ ஆண்டு முதல்‌ […]

You May Like