fbpx

40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை…! சென்னை வானிலை கொடுத்த எச்சரிக்கை…!

தமிழகத்தில் 28-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 27, 28 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

Vignesh

Next Post

அட்டகாசம்...! 2023-24 பருவத்தில் சணலின் குறைந்தபட்ச ஆதரவு விலை...! மத்திய அரசு ஒப்புதல்...!

Sat Mar 25 , 2023
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2023-24 பருவத்திற்கான கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2023-24 பருவத்தில் சணலின் குறைந்தபட்ச ஆதரவு விலை (முந்தைய TD-5 தரத்திற்கு சமமான TD-3) ஒரு குவிண்டாலுக்கு ரூ.5,050 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அகில இந்திய சராசரி எடை அளவிலான உற்பத்தி செலவை […]

You May Like