fbpx

தமிழகமே.. வரும் 3-ம் தேதி வரை வெளுத்து வாங்க போகும் கனமழை…! இந்த மாவட்டத்தில் மட்டும் தான்…!

தமிழகத்தில் வரும் 3-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல கீழடுக்குச்சுழற்சி காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

செப்டம்பர் 2-ம் தேதி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், நாமக்கல் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். அதே போல செப்டம்பர் 3-ம் தேதி, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதம் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடல் பகுதிகளில் படுத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இந்த ஆபத்தான சோதனையில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே.. இங்கு ஆண்கள் திருமணம் செய்ய முடியுமாம்..

Wed Aug 31 , 2022
உலகில் பல வகையான பழங்குடியினர் காணப்படுகின்றனர். இந்த பழங்குடியினர் அவர்களின் பாரம்பரியம், வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக இன்னும் தலைப்புச் செய்திகளில் இருக்கிறார்கள். அத்தகைய பழங்குடியினரைப் பற்றிய தகவல்களை இன்று பார்க்கலாம்.. பிரேசிலின் அமேசானின் Satere-Mawe பழங்குடியின மக்கள் தங்கள் ஆண்மையை நிரூபிக்க ஆபத்தான வேலையைச் செய்ய வேண்டும். இதுபோன்ற ஆபத்தான பாரம்பரியத்தை அவர்கள் இன்னும் பின்பற்றுகிறார்கள்.. அசாதாரணமான மற்றும் வேதனையளிக்கும் வலிமிகுந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் மூலம் […]

You May Like