fbpx

அலர்ட்…! அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் தொடர் மழை…! வானிலை மையம் கணிப்பு…!!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை முதல் வரும் 7-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

அனைத்து இறைச்சி கடைகளையும் மூட அதிரடி உத்தரவு...! இன்று ஒரு நாள் மட்டுமே...

Tue Apr 4 , 2023
மகாவீர் ஜெயித்தியை முன்னிட்டு இன்று இறைச்சி கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று சென்னை, தருமபுரி, கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இறைச்சிக் கூடங்கள் அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவப்பிரிவு கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள் அனைத்தும் வருகின்ற இன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி கடைகள் அனைத்தும் அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன. இதேபோல் ஆடு, மாடு, இதர இறைச்சிக் கடைகளில் இறைச்சி விற்பனை […]

You May Like