fbpx

மக்களே அலர்ட்…! அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடரும்…! மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை…!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்து, மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழ்நாடு கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று மற்றும் நாளை வடதமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 25, 26 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். சூறாவளி காற்று வீசிக் கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

தினமும் தூங்கும் முன்னர் பூண்டு சாப்பிடுவதால் இத்தனை பலன்கள் உள்ளதா...?

Wed Nov 23 , 2022
வாயுத்தொல்லைக்கு பூண்டு ஒரு சிறந்த மருந்து. எனவே இந்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் தூங்கும் முன்னர் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால், வாயுத் தொல்லை குறையும். தினமும் இரவில் படுக்கும் முன்பு ஒரு பூண்டுப் பல் பச்சையாகவே கடித்து சாப்பிட, உடம்பில் உள்ள அதிகபடியான கொழுப்பு போய் விடும். சர்க்கரை நோயுள்ளவர்கள் பூண்டு உட்கொண்டால், சர்க்கரை அளவை சீராக வைப்பதோடு, இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது. ஆஸ்துமா நோயால் துன்பப்படுபவர்கள், பூண்டுப் […]
உங்களுக்கு பூண்டு பிடிக்காதா..? எல்லா நன்மைகளும் அதுல தான் இருக்கு..!! இப்படி ட்ரை பண்ணி பாருங்க..!!

You May Like