fbpx

அடுத்த மூன்று மணி நேரத்தில் இந்த 9 மாவட்டத்தில் கனமழை…! எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்…!

அடுத்த மூன்று மணி நேரத்தில் ஈரோடு, நாமக்கல், விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னல் உடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அடுத்த மூன்று மணி நேரத்தில் ஈரோடு, நாமக்கல், விழுப்புரம், கடலூர்,திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னல் உடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 13-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னல் உடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 இருந்து 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்

Vignesh

Next Post

அதிகார வெறி கொண்ட ஒட்டுண்ணிகளால் சனாதன தர்மத்தை யாராலும் ஒழிக்க முடியாது!…உ.பி., முதல்வர் யோகி!

Fri Sep 8 , 2023
சனாதன தர்மத்தின் மீது கடந்த காலங்களில் நடத்தப்பட்ட பல தாக்குதல்கள் அதற்கு எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும், இன்றும் அது எந்த அதிகார வெறி கொண்ட “ஒட்டுண்ணி உயிரினங்களால்” பாதிக்கப்படாது என்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போன்ற நோய்களுடன் ஒப்பிட்டு பேசியது அரசியல் கட்சிகளிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், உ.பி. முதல்வர் தனது […]

You May Like