fbpx

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…! இந்த 14 மாவட்டத்தில் கனமழை…! வானிலை மையம் எச்சரிக்கை…!

தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக; இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 17-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை. 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

புகை பிடிப்பவரா நீங்கள்?? கட்டாயம் இதை எல்லாம் நீங்கள் சாப்பிட வேண்டும்..

Sat Oct 14 , 2023
தற்போது உள்ள காலகட்டத்தில் பலருக்கு புகைபிடிக்கும் பழக்கம் உள்ளது. இப்போதெல்லாம் பள்ளி சிறுவர்கள் கூட புகைப் பிடிக்கிறார்கள். புகை பிடிப்பதை பெருமையாக நினைக்கும் பள்ளி மாணவர்களும் ஏன், இப்போது மாணவிகளும் உள்ளனர். புகைபிடிப்பதால் உடல் குழாய்ச் சுருக்கம் அல்லது மலட்டுத்தன்மை, நுரையீரல் புற்றுநோய், மாரடைப்பு மற்றும் நாட்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் ஆகியவை ஏற்படுகிறது. அப்படி ஒருவர் புகைப்பிடிக்கும் போது சிகரெட்டிலுள்ள தொண்ணூறு சதவிகித நிக்கோட்டின், மூச்சுக்குழாய் வழியாகச் சென்று […]

You May Like