fbpx

வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று… மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்…! வானிலை மையம் எச்சரிக்கை…!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 28 முதல் 31-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இலங்கையில் கொரோனா பரவல் வேகமெடுப்பு!… திட்டமிட்டபடி ஆசிய கோப்பை தொடர் நடக்குமா?… 2 வீரர்களுக்கு நோய்த்தொற்று!

Sat Aug 26 , 2023
ஆசிய கோப்பை தொடர் வரும் 30 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் விக்கெட் கீப்பர் குசல் பெரேரா ஆகியோருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை 2023 தொடர் தொடங்க உள்ள நிலையில் கோவிட் 19 அச்சுறுத்தல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை இணைந்து ஆசிய கோப்பை தொடரை நடத்துகின்றன. அதன்படி, 2023-ம் […]

You May Like