fbpx

அனைவரும் அலர்ட்… இன்று நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட 20 மாவட்டத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை…!

தமிழகத்தில் இன்று நீலகிரி, ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட 20 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டலச்சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழையும் பெய்யும். நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை..! 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..! தயார் நிலையில் மீட்புப் படை..!

வரும் 4,5 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யும். தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஆகஸ்ட் 6ஆம் தேதி ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

அடேங்கப்பா... அரசு பேருந்தில் இன்று முதல் சுமை பெட்டி வாடகை திட்டம்‌…! இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க போதும்....

Wed Aug 3 , 2022
அரசு விரைவுப்‌ போக்குவரத்துக்‌ கழக பேருந்துகளின்‌ சுமை பெட்டி வாடகை திட்டம்‌ இன்று முதல் செயல்படுத்தப்பட உள்ளது. அரசு போக்குவரத்துக்‌ கழகங்களின்‌ வருவாயை பெருக்கும்‌ நோக்கத்தோடு பேருந்துகளில்‌ உள்ள உபயோகப்படுத்தப்‌ படாத சுமை பெட்டிகளை மாத வாடகைக்கு விட திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பினை, கடந்த 05.05.2022 அன்று போக்குவரத்து துறை மானியக்‌ கோரிக்கையின்‌ போது சட்டசபையில்‌ அறிவிக்கப்பட்டிருந்தது. அரசு விரைவு போக்குவரத்து கழகமானது தமிழகம்‌ முழுவதும்‌ குறைந்த இடைவெளியில்‌ […]

You May Like