fbpx

தமிழகத்தில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு மழை…! இந்த மாவட்ட மக்கள் கவனமாக இருங்க…!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று; தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை முதல் 10-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 11,12 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 இருந்து 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Vignesh

Next Post

பரபரப்பு...! உதயநிதி பேசியதை திரித்து பதிவிட்ட பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் மீது திருச்சி போலீசார் வழக்குப்பதிவு...!

Thu Sep 7 , 2023
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரித்து பதிவிட்ட பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா மீது திருச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்தை தவறாக பதிவிட்டதாக கூறி பாஜக தகவல் தொழில்நுட்பத் துறையின் பொறுப்பாளர் அமித் மாளவியா மீது திருச்சி காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பு மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், பகைமையை […]

You May Like