fbpx

#Alert: உருவான காற்றழுத்த தாழ்வு நிலை..‌.! 2-ம் தேதி வரை எல்லா எச்சரிக்கையா இருங்க…!

காற்றழுத்த தாழ்வு காரணமாக 2-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடிக்கிறது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடைந்து 1-ம் தேதி இலங்கை கடற்பகுதிகளை சென்றடையக்கூடும்.

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யுமாம்..!! எங்கெங்கு தெரியுமா..? வானிலை மையம் தகவல்..!!

இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 1-ம் தேதி தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

வரும் 2-ம் தேதி தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும் வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இன்று முதல் 2-ம் தேதி வரை இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

Vignesh

Next Post

இந்தியாவில் களைகட்டிய ஆணுறை, கருத்தடை மாத்திரைகள் விற்பனை.. இந்த மாநிலம் தான் முதலிடம்..

Mon Jan 30 , 2023
கொரோனா லாக்டவுன் காலத்தில் ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் விற்பனை அதிகரித்ததாக மத்திய சுகாதார அமைச்சகத் தரவுகள் தெரிவிக்கின்றன.. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் லாக்டவுன் அமலில் இருந்தது.. நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் அத்தியாவசிய வேலைகள் இருந்தால் மட்டுமே வெளியே வர அனுமதிக்கப்பட்டது.. தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது.. இந்த லாக்டவுன் காலத்தில் இந்தியாவில் ஆணுறை மற்றும் கருத்தடை […]

You May Like