fbpx

பயங்கர அலர்ட்… 18 மாவட்டத்தில் இன்று கொட்டப் போகும் கனமழை….! வானிலை மையம் தகவல்…!

தமிழகத்தில் வரும் 30-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் வரும் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், தென் தமிழக மாவட்டங்கள், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

ஒருமுறை முதலீடு செய்தால் போதும்.. இந்த எல்ஐசி பாலிசியில் முதிர்வுக்கு பின் ரூ.22 லட்சம் பெறலாம்..

Wed Jul 27 , 2022
ஆயுள் காப்பீட்டுத் திட்டம் சமீபத்தில் தன் சஞ்சய் என்ற புதிய ஆயுள் காப்பீட்டுக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. தன் சஞ்சய் என்பது இணைக்கப்படாத, பங்கேற்காத, தனிநபர், சேமிப்பு, ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். பாலிசி காலத்தின் போது ஆயுள் காப்பீட்டாளர் துரதிர்ஷ்டவசமாக மரணம் அடைந்தால், இந்தத் திட்டம் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்குகிறது. இது முதிர்வு தேதியிலிருந்து செலுத்தும் காலத்தின் போது உத்தரவாதமான வருமானத்தை வழங்குகிறது பாலிசி முதிர்வு தேதியிலிருந்து பே-அவுட் காலத்தின் […]

You May Like