ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த வாரத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக 27 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இதில், கூலிப்படையை சேர்ந்த திருவேங்கடம் காவல்துறையால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை போலீஸ் காவலில் எடுத்து தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தில் பல ரௌடிகள் கைகோர்த்து செயல்பட்டிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் நடந்து 2 மாதங்களை எட்டியுள்ள நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் புதிய தகவலை தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த வாரத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 90 சதவீத விசாரணை முடிவடைந்துவிட்டது, கொலைக்கான காரணத்தை விரைவில் தெரிவிப்போம், முக்கிய நபர்கள் குறித்தும் காவல்துறை தெரிவிக்கும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
Read more ; ஜியோ வழங்கும் அட்டகாச ரீசார்ஜ் பிளான்..!! எக்கச்சக்க ஆஃபர்.. 5 நாள் தான் டைம்.. மிஸ் பண்ணிடாதீங்க!!