CHENNAI: சென்னையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர் பெண் வீட்டாரால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்காலங்களில் ஜாதி மறுப்பு திருமணங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. அதேநேரம் சில பகுதிகளில் ஜாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிகளுக்கு பல்வேறு வகையான பிரச்சனைகளும் கொடுமைகளும் நடந்து வருகிறது. பல தம்பதிகள் ஆணவ படுகொலையும் செய்யப்பட்டுள்ளனர். இதே போன்ற ஒரு சம்பவம் இன்று சென்னையில் நடைபெற்று அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
சென்னை(CHENNAI) பள்ளிக்கரணையைச் சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர் ஜல்லடையாம் பேட்டையைச் சேர்ந்த ஷர்மி என்ற பெண்ணை காதலித்து வந்தார். வேற்று சமூகத்தைச் சேர்ந்த இருவரும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்தத் திருமணத்திற்கு பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு நிலவி வந்துள்ளது. பிரவீன் மற்றும் ஷர்மியின் திருமணத்தால் கடும் கோபத்தில் இருந்திருக்கிறார் அவரது அண்ணன் தினேஷ்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை தினேஷ் தனது நண்பர்களுடன் தங்கையின் கணவரான பிரவீனை கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ளார். இதனையடுத்து தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி இருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தினேஷின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய குற்றவாளிகளை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. சென்னையில் ஜாதி மறுப்பு திருமணத்தால் ஆணவக் கொலை நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.